வாழ்வின் ஓட்டம்
இள மனதின் குணம் எளிதே
பல கனவின் சுமை அதுவே
பொருற்செல்வம் சேர்ந்திடவே
மனம் துறந்தான் மனிதனுமே
சிற்றின்பத் தூரலிலே
நாழிகைகள் கழிந்ததுவே
பொருளீட்டும் நோக்கத்திலே
பேரார்வப் பற்றதுவும் அழிந்ததுவே
எனினும் உழைப்பின் வழியே
உணவு உடை கூரை கிடைத்ததுவே
புழு பட்டாம்பூச்சியாய் மலர்ந்திடுதே
புதியதோர் உலகு தெரிந்திடுதே
பாலகப் பருவம் முடிந்ததுமே
கண்ட கனாக்கள் மறைகிறதே
வாழ்வழியவில்லை என்ற நிம்மதிப் பெருமூச்சிலே
பல கோடிப்பேரின் இதயம் துடிக்கிறதே!


கருத்துகள்
கருத்துரையிடுக