வெற்றிடம்
வெற்றிடம் தவிர்க்க
காற்றாய்க் காதல்
விட்டயிடம் தவ்வி அணைத்திடுமா?
தீச் சுட்டிடும் தவிப்பு
தேற்றும் காதல்
என்னிடம் தூதாய் வந்திடுமா?
வற்றிடும் நெஞ்சை
வருத்திடும் காதல்
வலித்தடம் இன்றி மறைந்திடுமா?
சிதறிய மட்குடம்
மீண்டும் ஒட்டிட
அவா கொண்ட பேதை போல்
மங்கிய ஒற்றுமை
ஒன்றாய்ச் சேர்க்க
கனா கண்டு விட்டேன்!
வேற்றுமை உணர்ந்து
உண்மை கசந்திட
அன்பிழந்து நின்றேன்!
பச்சிளம் குழந்தையின்
மழலை அழுகையின்
பசிக்குரல் கெஞ்சல் போல்
இனித்திடும் இளமை
கனிந்திடும் மனதில்
காதல் பட்டினி கொண்டேன்!
இருதயக்குழியில் நயப்புற,
நங்கை தோளில் விழித்தெழ
பேராசைப் பிணியில் ஆழ்ந்தேன்!
கற்பனை களைய
வெறுமைக் காதல்
பிம்பத் துகளாய் உடையாதா?
மீணிகழுணர்வு
அரங்கேற்றும் காதல்
மனக்கண் விடுத்து நீங்காதா?
உடற்றும் களவு
ஊழ்வினைப் பாவம்
என்றால் பரிகாரம் ஏதும் கிடையாதா?



கருத்துகள்
கருத்துரையிடுக