மழலை


இருளது இருவிழிகள்
குழலிசையது மூச்சிடுதல்
குழறும் பஞ்சிதழ்கள்
குரலது சிரித்திடுதல்
உடம்பது கோடி மலர்கள்
விரலது மயில் இறகின் வருடல்
அசைந்திடும் பொன்னூஞ்சல் 
மழலையின் பொன்கால்கள்;
எத்தனை எத்தனை இனிமைகள்
அப்பிஞ்சு மழலைச் செல்வத்தில்! 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்