கனவுகள்


நேர்மறை எதிர்மறை
இயல்பு ஆச்சரியம்
முடிவுள்ளது முடிவற்றது
விருப்பு வெறுப்பு
வெண்மை கருப்பு
நன்மை தீமை
நடப்பது நடக்காதது 
போன்ற விசித்திரமான 
மாயச்சுழலில் கரடுமுரடாகக் கலந்து 
பல்வேறு வேடிக்கைகளில் மிதந்து 
யதார்த்தத்திலிருந்து விலகி குழப்பத்தில் திரிந்து;

நம்புகிற நம்பமுடியாத நாடகம் அரங்கேறும் மேடை
இலக்கியம் பாடாத காதை
கவிஞன் சொல்லாத உவமை 
எல்லாம் 
தூக்கம் தீட்டும் கனவுச் சித்திரங்கள் சொல்லி விட;

உயிரில் எங்கோ பிறந்து 
பாதி இருளிலேயே அழிந்து
அரிய சில அரைகுறையக நினைப்பில் கலந்து 
ஞாபகத்தின் சொந்தங்களாக எஞ்சி நிற்கும் கணநேரப் புனைவுகளே கனவுகள். 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்